5 நிமிஷத்துல் செய்யக்கூடிய வாழைப்பழ மில்க் ஷேக்!!
Sep 19, 2020, 13:02 IST

வாழைப்பழத்தில் அதிக அளவு ஃபைபர் உள்ளது, அதனால் இதனை நாம் எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரித்தல், தலைமுடி வளர்ச்சியினை ஊக்குவித்தல் என்பது போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினைக் கொடுக்கின்றது.
தற்போது அந்த வாழைப்பழத்தில் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வாழைப்பழம் - 1
முந்திரி- 5
பாதாம்- 5
பால் - 1 கப்
சர்க்கரை - சிறிதளவு
ஐஸ்கட்டி- 2
செய்முறை:
- முந்திரி மற்றும் பாதாம் பருப்பினை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
- அடுத்து மறுநாள் காலையில் அதனை மைய அரைத்துக் கொள்ளவும்.
- மேலும் வாழைப்பழத்துடன் பால், சர்க்கரை சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
- இப்போது டேஸ்ட்டியான வாழைப்பழ மில்க் ஷேக் ரெடி.