Tamil Wealth

வித்தியாசமான ஆவக்காய் சிக்கன் பிரியாணி!!

வித்தியாசமான ஆவக்காய் சிக்கன் பிரியாணி!!

நாம் இதுவரை சிக்கன், மட்டனில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்போம், அந்த வகையில் இன்று நாம் ஆவக்காயில் வித்தியாசமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். நிச்சயம் இதனை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

சிக்கன்- 1/2 கிலோ

பாஸ்மதி அரிசி - 500 கிராம்

நெய் - 2 ஸ்பூன்

எண்ணெய் - 1 ஸ்பூன்

பிரியாணி இலை - 2

இலவங்கப்பட்டை- 2,

கிராம்பு- 2 ,

ஏலக்காய்-2,

சாதிக்காய்-2,

அன்னாசி பூ - 2

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

தக்காளி - 2

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

மல்லி தூள் - 1 ஸ்பூன்

உப்பு - 1 ஸ்பூன்

ஆவக்காய் ஊறுகாய் - 3 ஸ்பூன்

புதினா இலைகள்- கைப்பிடியளவு

செய்முறை

1. குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல் பாசி, ஜாதிபத்திரி, பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து நன்கு வதக்கவும்

2. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்துள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

3. அடுத்து சிக்கன் மற்றும் ஆவக்காய் ஊறுகாய் சேர்த்து லேசாக வேக விடவும்.

4. அடுத்து புதினா இலை, கொத்தமல்லி இலை, அரிசியைவிட இரண்டு மடங்கு தண்ணீர், பாசுமதி அரிசி, நெய் சேர்த்து குக்கரை விசில் விட்டு இறக்கினால் ஆவக்காய் சிக்கன் பிரியாணி ரெடி.

Share this story