சத்தான சுவையான ஆப்பிள் அல்வா!!

எப்போதும் வீட்டில் அல்வா என்று செய்தால் அது கேரட் அல்வா அல்லது பீட்ரூட் அல்வாவாகத்தான் இருக்கும். மற்ற அல்வாக்களை நாம் கடையில் வாங்கியே சாப்பிட்டு பழகி இருப்போம். அந்தவகையில் இன்று சத்தான சுவையான ஆப்பிள் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
ஆப்பிள் - 2
சர்க்கரை - 4 ஸ்பூன்
நெய் - 5 ஸ்பூன்
கோதுமை மாவு - 1கப்
முந்திரிப் பருப்பு - 10
கேசரி பவுடர் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
1. ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில், நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை வறுத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வேறு ஒரு வாணலியில் நெய் ஊற்றி கோதுமை மாவு, ஆப்பிள் துருவலை சேர்த்து நன்கு கிளறவும்.
4. வெந்ததும் கேசரி பவுடர், சர்க்கரை, இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
5. அல்வா பதம் வந்ததும் முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறினால் டேஸ்ட்டியான ஆப்பிள் அல்வா ரெடி.