கும்பம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

கும்பம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

கும்பம் ராசியினருக்கு 2018 ம் வருடம் தொட்டது துலங்கும் வருடமாக இருக்கிறது. அனைத்து விஷயங்களும் நன்மைகள் தரும் ஆண்டாக இருக்க போகின்றது. முப்பது ஆண்டுகளில் ஒரு முறை தான் சனி பகவான் மூன்று, ஆறு, பதினொன்றாம் இடத்தில் வருவார். கும்பம் ராசியினருக்கு சனி பகவான் பதினொன்றாம் இடத்தில் இருக்கும் பொழுது நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். பாவ கிரகங்கள் மூன்று, ஆறு, பதினொன்றில் கோச்சராக ரீதியாகவும் சுய ஜாதகத்தில் இருந்தாலும் நன்மை தான் செய்யும். கோட்சர ரீதியாக கும்பம் ராசியினருக்கு ராகு ஆறாம் பாவத்தில் இருப்பதால் தொழில், வேலை செய்யும் இடம் நன்மை உண்டாகும்.

பொதுவான பலன்கள்

கும்பம் ராசியினருக்கு இந்த 2018ம் வருடம் யோகமான  காலம் என்றே கூறலாம். குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருப்பது மேலும் உங்கள் ராசியை ஐந்தாம் பார்வையாக பார்ப்பது சுப காரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும். பிற மதம், இனம், மொழி பேசுவார்கள் உங்களுடன் நட்பாக மற்றும் அவர்களால் ஏதேனும் நன்மை ஏற்படும்.

இதுவரை இனம் புரியாத பயம், குழப்பம், தாழ்வு மனப்பான்மை அகலும் ஆண்டாக இருக்கிறது. தயக்கத்தை விட்டு வாழ்க்கைக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி சொந்த பந்தங்கள் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி சொத்து, பாகம் பிரிவினை எல்லாம் கிடைக்கும் காலமாக இருக்கிறது.

இதுவரை சகோதர சகோதிரியிடம் இருந்து வந்த சண்டை, மனக்கசப்பான சம்பவம் எல்லாம் மறையும். இனி குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும்.  புனித யாத்திரை , இறை வழிபாடு, குலதெய்வம் வழிபாடு எல்லாம் அமையும். இஸ்லாமியருக்கு புனித யாத்திரையான ஹஜ் செல்லும் வாய்ப்பு இறைவன் உங்களுக்கு கொடுப்பார்.

உத்தியோகஸ்தர்கள்

அலுவலுகத்தில் இருந்து வந்த  தொல்லைகள், இறுக்கமான சூழ்நிலை எல்லாம் மாறும். அரசு சார்ந்த தொழில் இருப்பவர்கள் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிர்காலத்தை பற்றியே திட்டம் எல்லாம் தீட்டுவீர்கள். மத்திய, மாநிலம் அரசு தேர்வு எழுதி முடிவு காத்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். வெளிமாநில, வெளியூர் வேலைக்கு செல்ல நேரிடும். ஒரு சிலர்க்கு இடமாற்றம், வேலை மாற்றம் நிகழும். தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள் .

எதையும் சமாளிக்கும் ஆற்றல் வரக்கூடும். எலக்ட்ரிகல், மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ், பெண்கள் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரக்கூடும். அழகு சாதன பொருட்கள், நகை, கலை துறை இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றமான காலம் என்றே கூறலாம்.

வியாபாரம் / தொழிற்பிரிவினர்

முடங்கிப்போன வியாபாரம், தொழில் எல்லாம் சூடு பிடிக்க தொடங்கும். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் தொழில் இருப்பவர்களுக்கு ஏற்றார் போல் லாபம் வரக்கூடும். அயல்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் ஏதேனும் திருப்புமுனை நிகழும் என்பதால் அதற்கேற்ற முயற்சி செய்யுங்கள். கிரகங்கள் சாதகமாக இருக்கும் பொழுது எடுக்கும் முயற்சி யாவும் நன்மையே நடைபெறும்.

சுயதொழில் செய்பவர்கள் பொருள் வாங்க போதிய அளவிற்கு பணவரவு இருக்கும்.

பெண்கள்

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். உங்களை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தானாக வந்து உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த பூசல்கள் எல்லாம் அகலும். குடும்பத்தில் உங்கள் கருத்திற்கு மதிப்பு அளித்து அதன் படி செயல் புரிவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, பாராட்டு, சம்பளம் உயர்வு, இடம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களுக்கு எதிர் பார்த்த கொண்டு இருந்தது இப்பொழுது நிறைவேறும். கேட்டது கிடைக்கும், நடைபெறும் காலம். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு கட்டுவது, வாங்குவது, விற்பனை செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெறும். பேரன் பேத்திகள் வருகை மகிழ்ச்சி உண்டாகும்.

மாணவ/ மாணவிகள்

மாணவர்கள் ஏற்றம் தரும் ஆண்டாக இருக்கிறது. எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் அமைகிறது.  அலட்சியம், சோம்பல் காட்டாமல் சுறுசுறுப்புடன் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். சிறிதாக ஏதேனும் வலி தெரிந்தாலும் மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ளுங்கள்.

உடல் நிலை

உடல் நலம் சீராக இருக்கும். மருத்துவ செலவுகள் எல்லாம் குறைய தொடங்கும். அஜீரணம், அசிடிட்டி, தொண்டை, மூக்கு, முதுகு தண்டு ஒற்றை தலைவலி வரக்கூடும். நேரம் தவறாமல் உணவு உட்கொள்வது நன்மை உண்டாகும்.

Share this story