புதிய வசதியை அளிக்கிறது கூகுள் போட்டோஸ்

கூகுள் போட்டோஸ் செயலியானது தற்போது பயனர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக இரண்டு வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் அதிக பயனை அடைகின்றனர். இதில் ஒளிப்படங்களை எளிதாக பகிர்ந்துக் கொள்ளும்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதவாது நாம் எடுக்கின்ற புதிய ஓளிப்படங்களை மற்ற நண்பர்களுக்கு பகிர்வதற்கு அதன் மேல் கிளிக் செய்து பார்த்தால் அப்படத்தினை பகிர்வதற்கான வசதிகள் தோன்றும். இதனைப் பயன்படுத்தி யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு எளிதாக அனுப்பலாம். கூகுள் போட்டோஸில் சேவையை பயன்படுத்தி மற்றவர்களுக்கு அனுப்பலாம். அதாவது குறுஞ்செய்தி மூலமாகவும் இ –மெய்ல் மூலமாகவும் அனுப்பலாம். மேலும் நம் ஒளிப்படங்களை ஒன்றாக இணைத்து திரைப்படமாக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக எடுக்கும் படங்கள் அதுமட்டுமின்றி நம் கோப்பில் உள்ள தகுந்த படங்களை எடுத்து தானாக திரைப்படமாக்குகிறது. படங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்படுகிறது. இவ்விரண்டு வசதிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் பயனர்கள் அதிகமாக பயனடைகின்றனர். தங்கள் கோப்புகளை பயன்படுத்தி இம்முறைகளை செய்துக் கொள்ளலாம்.