ரூ.600 விலைக்குறைப்புடன் சாம்சங் கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் கடந்த மாதம் சாம்சங் கேலக்ஸி எம் 01 என்ற ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது, பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்ற இந்த சாம்சங் கேலக்ஸி M01 கோர் ஸ்மார்ட்போனுக்கு தற்போது சாம்சங் நிறுவனம் ரூ.600 வரையிலான விறைக்குறைப்பினை அறிவித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி M01 கோர் ஸ்மார்ட்போனின் விலை- ரூ.8999 à> தள்ளுபடியுடன் ரூ.8399
சாம்சங் கேலக்ஸி M01 கோர் ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி M01 கோர் ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது டெப்த் சென்சார் போன்றவற்றையும் 5 எம்பி செல்ஃபி கேமரா செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.
மேலும் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ் போன்ற வசதியினையும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 போன்றவற்றையும் கொண்டுள்ளது.