Tamil Wealth

ரூ.200 கேஷ்பேக்: இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது லாவா Z66 ஸ்மார்ட்போன்!

ரூ.200 கேஷ்பேக்: இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது லாவா Z66 ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் லாவா நிறுவனம் லாவா Z66 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது.

 1. லாவா இசட் 66 ஸ்மார்ட்போன் விலை- ரூ. 7,777

இந்த ஸ்மார்ட்போன் ஆனது தற்போதைக்கு ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது, இது ஆன்லைனில் இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. மேலும் முதல்கட்ட விற்பனையின் போது ரூ. 200 வரையில் கேஷ்பேக் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஸ்ப்ளே : லாவா இசட் 66 ஸ்மார்ட்போன் ஆனது 6.08 இன்ச் கொண்ட எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே 2.5D கர்வுட் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர்:இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டும் உள்ளது.

மெமரி:  லாவா இசட் 66 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபிஸ்டோரேஜ் எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரை உள்ளடக்க மெமரி ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: லாவா இசட் 66 ஸ்மார்ட்போன் 13 எம்பி செல்பி கேமரா,  13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ப்ளூடூத் வி 4.2 ஓடிஜி மைக்ரோ-யூ.எஸ்.பி கைரேகை ஸ்கேனர் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: லாவா இசட் 66 ஸ்மார்ட்போன் 3950 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Share this story