ரெட்மி கே20 புரோ ஸ்மார்ட்போனுக்கு சுதந்திர தின சலுகையாக ரூ.4000 விலைக் குறைப்பு!!

ரெட்மி கே20 புரோ ஸ்மார்ட்போனுக்கு சுதந்திர தின சலுகையாக ரூ.4000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஷாவ்மி தரப்பில் சுதந்திர தின சிறப்பு விற்பனையின்போது இந்த விலைக்குறைப்புடன் ஸ்மார்ட்போன் ஆனது விற்பனைக்கு வருகிறது.
1. ரெட்மி K20 ப்ரோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை- ரூ.26,999
2. ரெட்மி K20 ப்ரோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை- ரூ.22,999
ரெட்மி கே20 புரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 855 பிராசசர் வசதியினைக் கொண்டதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 48 எம்பி + 13 எம்பி + 8 எம்பி முதன்மை கேமராவையும், 20 எம்பி முன்பக்க கேமராவையும், 4000 எம்எஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.39 இன்ச் டிஸ்பிளேவினைக் (1080 x 2340 பிக்சல்ஸ் அமோலெட்) கொண்டதாக உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு வி9.0 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் ஃப்லேம் ரெட், க்ளாஸிர் ப்ளூ, கார்பன் பைபர் பிளாக், பெர்ல் வைட் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கிடைக்கிறது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் வி5 வசதியினைக் கொண்டுள்ளது.