10 % தள்ளுபடியுடன் விற்பனைக்கு வரும் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன்!!

பயனர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பினைப் பெற்ற நிறுவனமான நோக்கியா நிறுவனம் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 13 ஆம் தேதி விற்பனைக்கு வருகின்றது.
நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் விலை- ரூ.7,530 (தோராயமாக)
இந்த ஸ்மார்ட்போனுக்கு ஹெஸ்டிஎஃப்சி மற்றும் ஆக்சிஸ் கார்டுகளுக்கு 10 % தள்ளுபடியானது வழங்கப்படுகிறது.
டிஸ்ப்ளே: நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 1440 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
பிராசசர்: மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1.6GHz ஆக்டா கோர் UniSoC SC9863A செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.
மெமரி: நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசங்களைக் கொண்டும், மேலும் எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலம் 400 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாகவும் உள்ளது.
கேமரா: 8 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.
பேட்டரி: நோக்கியா சி3 ஸ்மார்ட்போன்அளவினைப் பொறுத்தவரை இது 3040 எம்ஏஹெச் பேட்டரிவ்கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.
இணைப்பு ஆதரவு: 4G VoLTE, Wi-Fi 802.11 b / g / n, புளூடூத் 4.2, GPS, GLONASS, இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்டல் வசதியினைக் கொண்டுள்ளது.