பேஸ் புக்கின் மார்க்கெட் ப்ளேஸ்

தற்போதெல்லாம் ஆன்லைன் மார்க்கெட் என்பது அதிகரித்து வருகிறது. பயனர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் விற்கவும் தற்போதெல்லாம் அதிகமாகவே ஆன் லைனில் வாங்குகின்றனர். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமும் தற்போது தனக்கென ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஏற்கனவே பேஸ்புக்கில் சில குரூப்புகள் இந்த பணியை தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றனர். தற்போது பொதுவாக தானே வடிவமைக்கவுள்ளது பேஸ்புக். இதன் மூலம் பயனர்கள் பொருள் வாங்குவதையும் விற்பதையும் எளிதாக செய்யமுடியும். இது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டைன் நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிலும் 18 வயதுக்கு மேல் உள்ள பயனர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். பின்னர் படிப்படியாக அனைவரும் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தும்படி அமையவுள்ளது. இப்புதிய அம்சமானது முதலில் ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் போன்ற தளத்தில் இருக்கும் பேஸ்புக் செயலியில் பயன்படுத்தமுடியும். அடுத்து டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தும் படி கொண்டுவரப்படுகிறது. இதிலும் தனது வெற்றி முகத்தை காட்டவுள்ளது பேஸ்புக். இதற்கு மார்க்கெட் ப்ளேஸ் (MARKET PLACE) என பெயரிடப்பட்டுள்ளது.