இலவசமாக வைஃபை வசதியை கொடுக்கும் கூகுள் நிறுவனம்

பிரபல கூகுள் நிறுவனம் நாடு முழுவதும் இலவசமாக வைஃபை வசதியை கூகுள் ஸ்டேசன் மூலம் கொடுக்க உள்ளது. இந்த ஸ்டேசன் மூலமாக வேகம் மற்றும் செயல் திறன் மிக்க வைஃபை வசதியை இலவசமாக கொடுக்க உள்ளது கூகுள் நிறுவனம்.
தற்போது தனது 18 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட கூகுள் நிறுவனத்தின் இணை இயக்குனர் சீஷர் செங்குப்தா கூறும்போது இன்று தனது முதல் கூகுள் ஸ்டேசனை இந்தியாவில் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
இதன் மூலம் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த கூகுள் ஸ்டேசன் இலவசமாக வைஃபை வசதியை கொடுக்கும். மேலும் இலவசமாக செயல் திறன்மிக்க இன்டர்நெட் வசதியை சாதாரண மக்களும் இதன் மூலமாக பெற முடியும். விரைவில் இந்த திட்டத்தினை நாடு முழுவதும் செயல்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் நாம் இதை பயன்படுத்தும் நிலை வரும்.