Tamil Wealth

10% கேஷ்பேக்: விற்பனைக்கு வரும் ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!

10% கேஷ்பேக்: விற்பனைக்கு வரும் ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!

இந்தோனேசியாவில் தற்போது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் விற்பனைக்கு வரும்போது ரியல்மி சி12 ஸ்மார்ட்போனுக்கு கிரெடிட் கார்டுகளுக்கு 10% கேஷ்பேக் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

டிஸ்பிளே: ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்பிளேக் கொண்டுள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பிராசஸர்: ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35என்எம் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. IMG PowerVR GE8320 GPU கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

கேமரா: ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி மோனோக்ரோம் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி:  ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் 3ஜிபிரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி/ ஜி / என், புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ்/ பீடோ, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Share this story