Tamil Wealth

ஏர்டெல்லின் அதிரடி முடிவு

ஏர்டெல்லின் அதிரடி முடிவு

புதிதாக வந்துள்ள ஜியோ சிம் ஆனது தற்போது மிகவும் அனைவரிடமும் பிரபலமாகிவருகிறது. இதில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு நெட் மற்றும் அனைத்து வசதிகளும் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய நெட்வொர்க்கில் அதிரடியாக சில முடிவுகளை எடுத்துள்ளன. இந்த வரிசையில் தற்போது ஏர்டெல் நிறுவனமும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தங்கள் தொலை தொடர்பு சேவையில் 18 எம்.பி.எஸ் வரை தனது வேகத்தினைவழங்கி வருகிறது. கூடிய விரைவில் இந்த வேகத்தை இன்னும் அதிகப்படுத்த உள்ளது. சில தொழில்நுட்பம் மூலம் இதன் வேகம் கூட்டப்படுகிறது. 87 நகரங்களுக்கு இந்த சேவையினை ஏற்படுத்த உள்ளது. இதன் முன் சில இடங்களில் சோதனை கால அடிப்படையில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவுள்ளது. ஆனால் இச்சேவையினை பெற புதிதாக மோடம் வாங்க வேண்டும் எனவும் சேவை வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கவில்லை எனில் வாடிக்கையாளர்கள் அந்த மோடத்தினை ஒரு மாத காலத்திற்குள் திரும்ப கொடுத்து தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்

Share this story