5% தள்ளுபடி: இந்தியாவில் களம் இறங்கியது விவோ Y20 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் விவோ Y20 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் அதன் விற்பனையினை நாளை துவக்குகின்றது.
விவோ Y20 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.12,990
இந்த விற்பனையின்போது ஆக்சிஸ் பேங்க் கிரெடிடி மற்றும் ஃபஸ் கார்டுகளுக்கு 5% தள்ளுபடியானது ப்ளிப்கார்ட்டில் வழங்கப்படுகின்றது.
டிஸ்பிளே: விவோ Y20 ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் iView எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
பிராசஸர்: விவோ Y20 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
மெமரி: விவோ Y20 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சம்: விவோ Y20 ஸ்மார்ட்போன் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது.
கேமரா: விவோ Y20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லெனஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி bokeh கேமரா போன்றவற்றையும் 8எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.
பேட்டரி: 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: இரட்டை 4G VoLTE, 2.4GHz / 5GHz Wi-Fi, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.