சருமத்தின் அழகை மெருகூட்டும் பூக்கள் தெரியுமா உங்களுக்கு! தெரிந்து கொள்வோமா?
Tue, 19 Sep 2017

பூக்கள் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை கொண்டு உள்ளதை போலவே, நம் சருமத்தையும் பிரகாசமாக ஜொலிக்க செய்யும் ஆற்றல் கொண்டது. அதை பற்றி பார்க்கலாம்.
ரோஜா :
- அனைவருக்கும் தெரிந்த பூ தான், தலையில் சூடுவோம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்பட கூடியதே. அதன் இதழ்களில் இருக்கும் நிறமிகள் நமது சருமத்திற்கு பொலிவை கொடுக்கும். தினம் ரோஜா இதழ்களை சாப்பிடுவதால் நாளடைவில் உங்கள் சருமத்தில் மாற்றத்தை காணலாம் அல்லது இதழ்களை அரைத்து அதனுடன் எலும்பிச்சை சாற்றினையும் கலந்து முகத்தி தினம் பூசி வர உங்கள் சருமம் நல்ல பொலிவை பெறும். கழுத்தில் அதிகமான சூட்டினால் உருவாகும் கருமையை போக்கவும் மற்றும் சருமத்தை மென்மையாகவும் வைத்து கொள்ள உதவுகிறது.
குங்கும பூ :
- குங்கும பூ அழகை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. குங்கும பூவை பாலில் கலந்து தினம் குடித்து வரலாம் அல்லது நீரில் நன்கு ஊற வைத்து சருமத்திற்கு பயன்படுத்த அழகான முக தோற்றத்தை பெறலாம். இதனை கை, கால்களுக்கும் பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.
செம்பருத்தி :
- வீட்டில் அழகிற்கு என்று வளர்க்கும் செம்பருத்தி நமது சருமத்தை அழகு படுத்துகிறது. கடின தன்மை கொண்ட சருமத்திற்கு செம்பருத்தியின் இதழ்களுடன் கடலை மாவு, தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு அரைத்து கருமை இருக்கும் இடங்கள் மற்றும் வெயிலின் தாக்கத்தினால் உண்டாகும் பாதிப்புகள் போன்றவைகளுக்கு தினமும் பயன்படுத்தி வர கொஞ்சம் கொஞ்சமாக நிற மாற்றத்தை காணலாம் மற்றும் இதன் இதழ்களை மட்டும் உதடுகளில் பயன்படுத்த நல்ல சிவப்பான உதடுகளை பெறலாம். கண்களிற்கு கீழ் வரும் கருவளையத்தை போக்கும் வல்லமையும் கொண்டது.
மல்லி :
- மல்லிகை பூ பெண்கள் அனைவரும் விரும்பி சூடுவது. பெண்கள் தலையில் சூட அவர்களுக்கு முக அழகை கொடுப்பது போலவே சருமத்தில் பயன்படுத்துவதின் மூலமும் பள பளப்பான தோற்றத்தை பெறலாம். மல்லிகையின் இதழ்களுடன் வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து பேஸ்ட் தயாரித்து தினம் முகத்தில் மற்றும் கை, கால்களில் தேய்த்து வர நல்ல சிவப்பழகை கொடுத்து, எண்ணெய் சருமத்தை பளிச்சென்று மாற செய்யும்.