Tamil Wealth

படிக கல் சரும பராமரிப்பில் உதவும் தெரியுமா உங்களுக்கு!

படிக கல் சரும பராமரிப்பில் உதவும் தெரியுமா உங்களுக்கு!

படிக கற்களை முடி வெட்டும் கடைகளில் மற்றும் முக அலங்காரம் செய்யும் கடைகளிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதற்கு காரணம் முடிகளில் இருக்கும் தொற்றுகள் முகத்தில் பட்டு அதனால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாமல் பாதுகாக்கும் மற்றும் அலங்கார நிலையங்களில் அதிகமே பயன்படும் இந்த கற்கள் சரும பராமரிப்பில் முக்கியம் பங்கு கொண்டு உள்ளது.

முடி திருத்தகம் :

முடி திருத்தகம் கடைகளில் படிக கற்கள் முகத்தில் எவ்வித தொற்றுகளையும் ஏற்படுத்தாமல் நம்மை பாதுகாக்கிறது. முடி திருத்தகம் செய்த பின் இந்த கற்களை கொண்டு முகத்தில் பயன்படுத்தலாம், முக்கியமாக தாடியை சேவ் செய்த பின்னர் முகத்தில் பயன்படுத்த சேவ் செய்ய உபயோகிக்கும் வேதி பொருட்கள் மற்றும் சாதனங்களால் அரிப்புகள் போன்ற எந்த கோளாறுகளும் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.

முக அலங்காரம் :

ஒப்பனை செய்து கொள்ளும் இடங்களில் அதிக பயன்பாடு கொண்டதே இந்த படிக கற்கள். ஒப்பனையின் பொழுது பயன்படுத்தும் கிரீம் மற்றும் இதர பொருட்களின் ஒவ்வாமையினால் ஏற்படும் அனைத்து குறைபாடுகளுக்கும் உதவும் வகையில் உருவானதே.

உரிக்கும் தன்மை கொண்ட படிக கல் :

உடலில் கருமை இருக்கும் இடத்தில் படிக கற்களை கொண்டு தினமும் தேய்த்து வர அது கருமை நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக உரித்து வெண்மை நிறமாக மாற்றும் தன்மை கொண்டது. சருமத்திற்கு சிவப்பழகை கொடுத்து நம்மை பொலிவுடன் வைத்து கொள்ள உதவுகிறது. கருமை நிறத்தை நீக்கும் சிறந்த பொருளாக கருத படுகிறது படிக கற்கள்.

Share this story