சருமத்தை அழகு படுத்த உதவும் முறைகளை தெரிந்து பயன்படுத்தலாம் !

சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள், நாம் உண்ணும் உணவிலும் மற்றும் சுற்று சூழலில் இருக்கும் தூசுகளால் ஏற்படும் பாதிப்புகளும் தான் காரணம்.
சருமத்தை பராமரிக்க உதவும் முறைகள்:
சருமத்தை பராமரிக்க உதவும் ஆக்ஸிஜன் பேசியல் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா. இதனை மேற்கொள்வதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கவும் மற்றும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும் தன்மையும் கொண்டு உள்ளது.
முகம் எப்பொழுது எண்ணெய் பிசுக்கை கொண்டி இருப்பவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.
வறட்சியை போக்கும் :
நீர் சத்துக்கள் குறைபாடுகளால் மற்றும் வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஏற்படும் வறட்சியால் சருமத்தில் பருக்கள் மற்றும் மற்ற கோளாறுகளை குண படுத்த உதவும் சிறந்த முறையே இந்த ஆக்ஸிஜன் முறை. சருமத்தில் இருக்கும் நிற மாற்றத்தை போக்கவும் மற்றும் கருமை நிறத்தை வெண்மை நிறமாக மாற்றும் தன்மை கொண்டது.
கொலாஜன் உற்பத்தி குறைவு :
சருமத்தில் இருக்கும் கொலாஜன் உற்பத்தி குறைவதால் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய இந்த முறை பயன்படுகிறது. முக்கியமாக சுருக்கங்களை ஏற்படுத்தும் கொலாஜனை தடுக்க உதவுகிறது.
ரத்த ஓட்டம் :
இந்த முறை உடலில் ரத்த ஓட்டத்தை சுத்திகரித்து சீராக அமைய செய்யும் மற்றும் பருக்களால் ஏற்படும் நீர் கட்டுதல் போன்றவற்றை குண படுத்தும் உகந்த முறை.
சுப நிகழ்ச்சி:
பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க மிகவும் ஆர்வம் கொண்டவர்கள், ஏதேனும் சுப நிகழ்ச்சி என்றால் உடனே செல்வது அழகு நிலையத்திற்கு தான். இந்த ஆக்ஸிஜன் சிகிச்சையை செய்வதனால் முகத்தில் இருக்கும் மேக்கப் குறையாமல் அப்படியே இருக்கும். நீண்ட நேரம் அழகை தக்க வைத்து கொள்ளும் பண்பை கொண்டு உள்ளது.
உணவு முறை முக்கியம் :
அதிக கொழுப்புகள் இருக்கும் உணவுகள் மற்றும் எண்ணெய் உபயோகித்து தயாரிக்க பட்ட உணவுகளையும் அதிகம் உட்கொள்வதால் சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் வரும். இதற்கு ஆக்ஸிஜன் சிகிச்சை பயன் உள்ளதாக கருத படும்.