ஐஸ் கட்டியை கொண்டு சருமத்தை பராமரிக்கலாம்! இதை முயற்சி பண்ணிபாருங்க!

உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள ஐஸ் கட்டியை கொண்டு செய்முறைகள் செய்து பாருங்கள். நீங்களே மாற்றத்தை கண்டு மீண்டும் உபயோகிப்பீர்கள்.
கண்களில் ஏற்படும் வீக்கம், வலிகள், கண்களின் மங்கிய நிலை, சோர்வை போக்கும் விதத்தில் ஐஸ் கட்டியை கண்களுக்கு ஒத்தடம் கொடுக்க கண்கள் பராமரிக்க படும்.
சருமத்தில் இருக்கும் சிறு சிறு துளைகள் மூலம் வெளியேறும் அழுக்குகள், ஐஸ் கட்டியை முகத்தில் பயன்படுத்துவதால் அந்த துளைகள் பெரிதாகி முகத்தில் இருக்கும் அழுக்குகள் அதிக அளவில் விரைவில் வெளி ஆகும்.
சருமத்தில் இருக்கும் இறந்த செல்களால் ஏற்படும் வறட்சி, எண்ணெய் பிசுக்கு, பருக்கள் போன்றவைகளுக்கு ஐஸ் கட்டியை பயன்படுத்த இறந்த செல்களை உடனே நீக்கி முகத்திற்கு பாதுகாப்பு தரும்.
சூரியனின் வெப்பத்தினால் உண்டாகும் சரும கோளாறுகளுக்கு ஐஸ் கட்டியை முகத்திற்கு நேரடியாக உபயோகிக்க வேண்டாம். ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து கட்டி முகத்தில் ஒத்தடம் கொடுக்க நல்ல பலனை கொடுக்கும்.
முகத்தை அழகு படுத்த செய்யும் ஒப்பனைகள் நீண்ட நேரம் முகத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒப்பனை செய்வதற்கு முன் ஐஸ் கட்டியை கொண்டு முகத்தை நன்கு சுத்தம் செய்த பின்னரே செய்ய முகத்தை அப்படியே அழகாக வைத்து கொள்ளும்.