Tamil Wealth

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்களா நீங்கள் !

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்களா நீங்கள் !

சிலருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட பிடிக்கும். ஆனால் ஆய்வில் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவதால் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் என்று கூற படுகிறது.

உண்டாகும் நோய்கள் :

வைட்டமின் பி12 இருக்கும் மீன் வகைகளை உண்ணாததால் அவர்களுக்கு அலசமைர், நினைவாற்றலில் குறைபாடுகள் வர கூடும்.

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவதால் அவர்களுக்கு மீன் மற்றும் முட்டை, மற்ற அசைவ உணவுகளில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் கிடைப்பதில்லை. கண்களில் ஏற்படும் குறைபாடுகளை போக்க மிகவும் உதவ கூடியது மீன் தான்.

வைட்டமின்கள் பற்றாக்குறை :

வைட்டமின் பி, வைட்டமின் 12 போன்றவை அசைவ உணவுகளிலே அதிகமாக காண படுகிறது. வைட்டமின் குறைபாடுகளை ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும். அவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பதால் அதில் இருக்கும் வைட்டமின்கள், ஊட்ட சத்துக்கள் கிடைப்பதில்லை.

உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான போலிக் அமிலம் காய்கறியில் தான் இருக்கிறது.

தாவரத்தில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் அசைவ உணவுகளில் இருப்பதில்லை, வைட்டமின் 12, கார்னோசின், டாரின் , வைட்டமின் பி, DHA ,EPA போன்றவை அசைவ உணவுகளில் இருக்கும்.

அடிக்கடி சைவ உணவுகளையே உட்கொள்ளவதால் சிலருக்கு மன அழுத்தங்களை ஏற்படுத்தும், அதனால் உடல் சோர்வையும் உண்டாக்கும். இதற்கு சிறந்த தீர்வு வைட்டமின் 12 இருக்கும் உணவுகளையும் அல்லது ஒமேகா 3, போலேட் போன்றவை இருக்கும் உணவுகளை உட்கொள்ளவதே நல்லது.

ஒமேகா 3 இருக்கும் மீன் வகைகளை சாப்பிட உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்கும். மீன் வகைகள் பின்வருமாறு:

  • அன்கோவீ
  • சால்மன்
  • சர்டைன்
  • கானாங்கெளுத்தி

ஒமேகா 3 குறைவால் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்கு உள்ளாகும் :

மூளையின் செயலை திறன் பாதித்து, ஞாபக திறனை குறைக்கும்.

இதயத்தில் சில கோளாறுகளை ஏற்படுத்தும், இதயத்தில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மன நிலை மாறி, மன அழுத்தங்களை ஏற்படுத்தும் மற்றும் உடலும் மனதும் எப்பது ஒருவித சோர்வு நிலையை கொண்டே இருக்கும்.

Share this story