Tamil Wealth

முகத்தில் சுருக்கம் உருவாகிறதா! கவலைய விடுங்க!

முகத்தில் சுருக்கம் உருவாகிறதா! கவலைய விடுங்க!

முகத்தில் ஏற்படும் சுருக்கத்தால் வயது முதிர்ந்த தோற்றத்தை பெறுகிறோம். இவை மன வேதனையை       ஏற்படுத்தும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் முக்கத்தில் உருவாகும் சுருக்கங்கள் அவர்களின் தோற்றத்தையே மாற்றி இளமை தோற்றத்தை நீக்கி தசைகள் சுருங்கி வயதான தோற்றத்தை கொடுக்கிறது.

வினிகரை கொண்டு முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க வேண்டுமா?

வினிகரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அதனுடன் தேவையான அளவு நீரினை கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வந்து முகத்தில் தினமும் பயன்படுத்தி வர சுருக்கங்கள் குறைந்து முகம் பொலிவு பெறுவதோடு, சருமத்தில் எவ்வித கோளாறுகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.

முட்டையின் வெள்ளை கருவை கொண்டு சுருக்கத்தை போக்குவோம்!

ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்து அதனை தினமும் முகத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து பின்னர் வெறும் நீரினால் முகத்தை கழுவி வர வேண்டும். இதனை தொடர்ந்து செய்ய சுருக்கத்தினால் உண்டாகும் கோடுகள் நீங்கும் மற்றும் சருமம் இளமையான தோற்றத்தை கொடுத்து பள பளப்பாகும்.

கடலை மாவு மற்றும் வேப்பிலை சாற்றினை கொண்டு அழகை பெறலாம்

செய்முறை :

வேப்பிலையின் இலைகளை நீரினை கொண்டு நன்கு சுத்தம் செய்த பின் மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாற்றினை மட்டும் வடிகட்டி அதனுடன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து கெட்டியான பதம் வந்தவுடன் முகத்தில் முழுவதும் பேசியல் செய்ய வேண்டும். பின்னர் சில நிமிடங்கள் கடந்த பிறகு முகத்தினை வெறும் நீர் அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு கழுவ நல்ல பலனை காணலாம். சுருக்கங்கள் விரைவில் மறைந்து பிரகாசமான தோற்றத்தை கொடுத்து சிவப்பழகையும் கொடுக்கும் ஆற்றல் கொண்டது.

Share this story