Tamil Wealth

புதியதாக கட்டிட பணியை தொடங்கும் முன் பூஜை செய்யும் முறை!!

புதியதாக கட்டிட பணியை தொடங்கும் முன் பூஜை செய்யும் முறை!!

புதியதாக கட்டிட பணியை தொடங்கும் முன் பூஜை செய்யும் முறை:-

மனையின் வடகிழக்கு பகுதியில் பள்ளம் தோண்டி ஐந்து சுமங்கிலிகளை தண்ணீர் குடத்துடன் ஒருவர் பின்னர் ஒருவராக பள்ளத்தில் மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்த கலவையை ஊற்ற வேண்டும். வாழை இலையில் கடலை, அவல், பொரி, நாட்டு சர்க்கரை கலந்து வைக்க வேண்டும். பின்னர் நெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தி குடும்ப தலைவி விளக்கேற்ற வேண்டும்.

வாழை இலையில் உங்களுக்கு விருப்பமான மூன்று கனிகளை வைக்கலாம். இரண்டு தேங்காயை நீர் சிந்தாமல் உடைத்து வைக்க வேண்டும். தேங்காய் தண்ணீர் சிந்திவிட்டால் அதனுள் நீர் ஊற்றி வைக்க வேண்டும். அதன் பின்னர் கற்பூரம் ஏற்றி 108 முறை வாஸ்து காயத்ரி மந்திரத்தை சொல்லி கடவுளின் பாதத்தில் பூக்களை தூவ வேண்டும். அதன் பின்னர் எலுமிச்சை பழம், கற்பூரம் எடுத்து தென் மேற்கு, தென் கிழக்கு, வடகிழக்கு, வட மேற்கு ஆகிய பகுதியில் கற்பூரம் வைத்து எலுமிச்சை பழத்தை இரண்டாக பிழிந்து தரையில் போட வேண்டும்.

பின்னர் மனையின் எட்டு திசைகளிலும் குங்குமம், மஞ்சள், பூ ஆகியவற்றை பூமியில் போட வேண்டும். அதன் பின்னர் வீடு கட்டுபவர் 9 சுமங்கிலியின் கையிலிருந்து செங்கலை வாங்கி பள்ளம் தோண்டிய இடத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியவாறு அடுக்க வேண்டும். அதன் பிறகு நவதானியங்களை போட்டு தீபாரதனை காட்ட வேண்டும். பூஜைக்கு வந்தவர்கள் அனைவரையும் கிழக்கு முகமாக நிற்க சொல்லி முதலில் எலுமிச்சை பழத்துடன் கற்பூரம் வைத்து திருஷ்டி சுற்றி தெருவில் போட வேண்டும். இதே போல தேங்காய் மற்றும் பூசணிக்காயிலும் கற்பூரம் வைத்து திருஷ்டி சுற்றி தெருவில் போட்டு உடைக்க வேண்டும்.

Share this story