மரமல்லி நமது உடலை பலப்படுத்தும்!!
Tue, 5 Sep 2017

மரமல்லி என்பது பூக்களை போன்றதே. அழகான வெண்மை நிற தோற்றத்தில் இருக்கும் இந்த பூ நமக்கு கொடுக்கும் உடல் ஆரோக்கியம் அறிவோமா!
மரமல்லி பயன்கள் :
- மரமல்லி பூக்களில் இருந்து பெறப்படும் சாற்றில் இருந்து தைலம் தயாரிக்கலாம் அல்லது சாற்றுடன் இனிப்பு சுவை கலந்து குடிக்க நல்ல ஆரோக்கியதை பெறலாம்.
மூட்டு எலும்புகள், முதுகு வலிகள் என உடம்பில் ஏற்படும் வலி அனைத்திற்கும் இதில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தை தடவ வலிகள் குறைந்து நிவாரணம் பெறலாம். - இதன் எண்ணெயை முகத்தில் அல்லது உடம்பில் ஏற்படும் சுருக்கங்கள், கருமை நிறம், தழும்புகள், இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும் வல்லமை கொண்டது.
- இதிலிருந்து பெறப்படும் தைலத்தை பயன்படுத்த ஒவ்வாமையால் வர கூடிய நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
- மரமல்லி பூவை நீருடன் சேர்த்து வேக வைத்து அந்த நீரை வடிகட்டி அதனை தினம் அருந்த காய்ச்சல் வராமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கும் மற்றும் சளி தொல்லையால் ஏற்படும் கோளாறுகள் வராது, எலும்புகளுக்கும் உறுதியை கொடுக்கிறது.