செவ்வாழை பழத்தின் அற்புத மருத்துவம்!

பார்ப்பதற்கு அழகான தோற்றம் கொண்ட செவ்வாழையில் மருத்துவ ஆரோக்கியம் அதிகம் உள்ளது. செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வர மாலை கண் நோய் இருபவர்கள் நல்ல பலனை பெறலாம்.
ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும், சீரான ரத்த ஓட்டத்தை கொடுக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும், தோல்களில் ஏற்படும் வெடிப்புகள், தழும்புகள் , சொறி, சிரங்கு போன்றவைகளுக்கு சிறந்த மருந்து செவ்வாழை பழம்.
உணவு சாப்பிட்ட பின் ஒரு செவ்வாழை சாப்பிட ஜீரண அடையும். கண் பார்வை சரியாக தெரியவில்லை என்றால் தினம் ஒரு வாழை சாப்பிடுங்கள் கண் பார்வை நன்றாக தெரியும். மூல நோய்களுக்கு சிறந்த நிவாரணியே செவ்வாழை.
சொறி சிரங்கு பிரச்சனைகளுக்கும் செவ்வாழை நல்ல மருந்து தான். நரம்புகள் வலு விழந்து நரம்பு தளர்ச்சியால் அவதி படுவோர் தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுங்கள் நல்ல நிவாரணம் தரும்.
கல்லீரல் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை அனைத்திற்கும் நல்ல நிவாரணம் தர கூடியதே இது. சரும பிரச்சனைகளையும் சரி செய்யும் திறன் கொண்டது.