பெருங்காயம் ஆரோக்கியத்தை தருமா?
Sep 1, 2017, 17:40 IST

நம் சமையலில் பயன்படும் பெருங்காயம் உடல் நலத்திற்கு பெரும் பங்கு கொண்டது.
பெருங்காய தூளின் மகிமை :
பெருங்காய தூள் சமையலுக்கு பயன்படுவது போலவே நம் சருமத்திற்கும் பயன்படுகிறது. சருமத்தில் ஏற்படும் பருக்கள், வெடிப்புகள், தழும்புகள் அனைத்திற்கும் பெருங்காய தூளை கொஞ்சம் தடவி வர இதனை தினமும் செய்து வர முகத்தில் ஏற்படும் அனைத்து தொற்றுகளும் சென்று விடும்.
தலை வலி குணம் அடைய வெந்நீருடன் சேர்த்து பெருங்காய தூளை கலந்து குடித்து வரலாம்.
சமையலின் வாசனை பொருளாக பயன்டும் இதை நரம்புகள் மேன்மை படவும், தலை சுத்தல், வாந்தி போன்ற சூழ்நிலையிலும் பயன்படுத்தலாம்.
- உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ரத்த உறைதலுக்கு பெருங்காய தூளை சாப்பிட கட்டுக்குள் வரும்.
- உடலில் இருக்கும் அணுக்களை பராமரித்து புற்று நோய் தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக இன்சுலினை சுரக்க செய்யுது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து ஆரோக்கியத்துடன் வைக்கும்.