தயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து உண்ணக்கூடாது ஏன்?

நாம் சில உணவுப் பொருட்களுடன் சில உணவுப் பொருட்களை வைத்து சாப்பிட்டால் விஷ உணவு என்னும் ஃபுட் பாய்சன் ஆகிடும். நம் வீட்டில் உள்ள பெரியோரும் இதை சொல்வதுண்டு.
அதாவது தயிரில் உள்ள அதிக அளவு புரதமானது, பழங்கள் சாப்பிட்ட பின்னர் இது செரிமானத்தினை குறைக்கிறது. மேலும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடும். அதற்குக் காரணம் பழங்களில் உள்ள அமிலத் தன்மையாகும்.
பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் இவற்றுடன் வாழைப்பழம் , கீரை போன்றவைகளை எடுத்துக் கொள்ளுதலைக் குறைத்த்ல் வேண்டும், ஏனெனில் இது செரிமானமாக அதிக நேரம் பிடிக்கும். அதிலும் இரவு நேரங்களில் கூடவே கூடாது என்னும் அளவு தடா போட்டு விடவேண்டும்.
அதே சமயத்தில் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், மீன், காடை, கவுதாரி என எந்தவொரு அசைவ உணவுடனும் தயிரை சாப்பிடகூடாது. அதிலும் மிக முக்கியமாக மீனையும் தயிரையும் ஒன்றாக சாப்பிட்டால் தோல் வியாதிகளான வெண் குஷ்டம் போன்றவை ஏற்படும்.
தயிரைவிட மோரினை எடுத்துக் கொள்வதை பழக்கமாக்குவது நல்லது. ஏனெனில் மோர் தயிருடன் ஒப்பிடும்போது கூடுதலான ஜீரண சக்தி கொண்டது.