Tamil Wealth

சுண்டைக்காய் சாப்பிட்டால் அப்படி என்ன கிடைக்கப் போகிறது!

சுண்டைக்காய் அளவில் சிறியதாக இருந்தாலும் அதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. சுண்டைக்காய் எந்த இடத்திலும் வளரும் தன்மை கொண்டது. சுண்டைக்காயின் மலர்களும், காய்களும் கொத்து கொத்தாக வளரும். சுண்டைக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

செடியில் இருந்து கிடைக்கும் சுண்டை வத்தல் பச்சை நிறத்தில் காணப்படும். இதை இரண்டாக பிளந்து மோர் ஊற்றி வெயிலில் காய வைத்து எடுத்த சுண்டை வத்தல் தான் சாப்பிட ஏற்றது. பெரும்பாலும் இவை கடைகளிலே கிடைக்கும். இதை எண்ணெயில் பொரித்தோ அல்லது குழம்பாகவோ சாப்பிடலாம்.

சுண்டைக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:-

  • இதை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை அதிகரிக்கும். இதன் காரணமாக உடலில் இரத்த சோகை ஏற்படாமல் பாதுக்காக்க முடியும். இரத்த சோகையை விரட்டும் தன்மைக் சுண்டைக்காயிற்கு உண்டு.
  • இரத்த குழாய்களில் படியும் கெட்ட கொழுப்புகளை கரைக்க இது உதவுகிறது. மேலும் உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் நடுக்கம், மயக்கம், சோர்வு, மூச்சுக் கோளாறுகள் போன்றவை நீங்கும்.
  • குழந்தைகள் இதை சாப்பிடுவதால் உடல் மற்றும் எலும்பு வளர்ச்சி அதிகரிக்கும். வயிற்றில் பூச்சிகளால் ஏற்படும் வலி, மலச்சிக்கல் போன்றவை வராமல் பார்த்து கொள்ளலாம்.
  • சுண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமா மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. குழந்தை பெற்ற பெண்மணிகள் இதை உணவில் சேர்த்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

Share this story