குழந்தை பிறந்த ஒரு ஆண்டு வரை என்ன சாப்பிடலாம்!!

குழந்தை பிறந்த ஒரு ஆண்டு வரை என்ன சாப்பிடலாம்!!

பெரும்பாலான அம்மாக்களுக்கு தன் குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் குடும்பத்தை விட்டு தனிக் குடித்தனம் இருப்பது தான். கூட்டுக் குடும்பமாக இருந்தால் அங்குள்ள பெரியோர்களுக்கு என்ன சாப்பிடலாம் எப்பொழுது சாப்பிடலாம் என்று தெரியும். தெரியாதவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளலாம்.

கொடுக்க வேண்டிய உணவுகள்:-

குழந்தை பிறந்து முதல் மூன்று மாத காலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு எந்த விதமான திட உணவுகளையும் கொடுக்கக் கூடாது.
முதல் மாதத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரண்டாவது மாதம் ஒரு நாளைக்கு 7 – 8 முறை கொடுக்க வேண்டும். மூன்றாவது மாதத்தில் நாங்கு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
நான்காவது மாதம் முதல் மருத்துவரின் ஆலோசனைப் படி ஆரஞ்சு சூஸ் கொடுக்கலாம். வீட்டிலே தயாரித்தல் இன்னமும் நலம்.
ஐந்தாவது மாதம் மருத்துவரிடம் கேட்டு திட உணவுகளை கொடுங்கள். வாழைப்பழம், ஆப்பிள், சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றை அரைத்து கொடுக்க வேண்டும்.
ஆறாவது மாதத்தில் குழந்தைகள் சில உணவுகளை சாப்பிட மறுத்தால் மறுபடியும் கொடுக்க வேண்டாம். தாய்ப்பாலுடன் திட உணவுகளை அரைத்து கொடுக்கலாம்.
ஏழாவது மாதம் சாதம் மற்றும் காய்கறிகளை நன்கு அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். எட்டாவது மற்றும் ஒன்பதாவது மாதத்தில் இதுவரைக்கும் கொடுத்த உணவிலிருந்து அதிகமான அளவு உணவுகளை குழந்தைக்கு கொடுக்கலாம். சாக்லேட், கேக், சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பத்து, பதினொன்று, பன்னிரெண்டு மாதம் கழித்து வேக வைத்த காய்கறிகள், சாதம், பால், தயிர், பழங்கள் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம்.

Share this story