பார்வை ஒழுங்காக தெரியவில்லையே என்ன செய்வது!

உணவு வகை அதுவும் அசைவ உணவுகளில் சிறந்தது மீன். மீனை குழம்பு வைத்து சாப்பிட்டால் கண் பார்வைக்கு இன்றியமையாத ஒன்று.
கீரை வகைகள் தினமும் சாப்பிட்டால் கண் சம்பந்தமான எவ்வித பிரச்சனையும் நம்மை அணுகவே அணுகாது.
கண்களை தினமும் காலை, மாலை, இரவு தூங்கும் போது தண்ணீரை வைத்து ஒத்தடம் கொடுப்பது மிகவும் நன்று.
பார்வை குறைபாடு கரணம் அதிகமாக கணினி, மொபைல் பயன்படுத்துவதால், அதை கூர்ந்து கவனிப்பதில் கண்களில் பாதிப்புகள் வருகிறது.
ஒழுங்கான தூக்கமின்மையும் கண்ணில் வரும் குறைபாடுகளுக்கு முக்கிய காரணமே. தேவையான ஓய்வை கண்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கண் உறுத்தல், எரிச்சல், அலற்சி எல்லாம் ஏற்படத்தான் செய்யும்.
நாம் தலைக்கு எண்ணெய் வைக்கவில்லை என்றாலும் கண்ணில் வலிகள் ஏற்படும், கண்ணின் மூலமாக தலை வலியும் வர கூடும்.
தினமும் காலையில் கண்களுக்கு பயிற்சி செய்யலாம், கண்களை நன்கு தேய்த்து விடுவது, கண்களை நன்கு அசைப்பது போன்றவைகளை செய்தால் பாதிப்புகள் வராது.