ஏலக்காயில் அப்படி என்ன நன்மை கிடைக்க போகுது?
Sep 12, 2017, 18:00 IST

ஏலக்காய் எல்லா ருசி வரக்கூடிய உணவிலும் சேர்க்கப்பட்டு இருக்கும். குறிப்பாக சொன்னால் பிரியாணி, பாயாசம் போன்றவை ஆகும். இதன் ருசியை போலவே பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஏலக்காயின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
ஏலக்காயின் நன்மைகள்:-
- செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், குமட்டல், வாய்வு, ஏப்பம், வாந்தி, மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்ய ஏலக்காய் பயன்படுகிறது.
- ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். மேலும் சிறுநீரக குழாயை சுத்தமாக்கும்.
- ஏலக்காய் தேநீர் குடித்தால் வேலை நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தத்தை கட்டுபடுத்த முடியும். என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- ஏலக்காயை கசாயம் செய்து குடித்தால் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை குணமாகும். மேலும் இதயத்தில் உள்ள இரத்தத்தை உறையாமல் வைக்கும்.
- தொடர்ச்சியாக விக்கல் ஏற்பட்டால் இரண்டு ஏலக்காயை பொடி செய்து அதனுடன் புதினா இலை மற்றும் நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் விக்கல் நின்று விடும்.