உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடலாம்?

உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடலாம்?

அதிக உடல் பருமன் கொண்டிருந்தால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் சோம்பேறியாக மாறிவிடுவோம். மேலும் இது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதற்கு சரியான டயட் முறையும் உடற்பயிற்சியும் சிறந்த பலனை அளிக்கும். உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க சாப்பிட வேண்டியவை:-

  • உங்களுக்கு பசி ஏற்படும் போது கொய்யா சாப்பிடலாம். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவு. நார்ச்சத்து, வைட்ட்மின்- சி, பொட்டாசியம், கால்சியம், மினரல்ஸ் போன்றவை அதிக அளவில் அடங்கி உள்ளன.
  • கேரட்டை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நோய் தொற்றுகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
  • பஞ்சாபின் பாரம்பரிய உணவான கடுகு இலைகளில் வைட்டமின், கால்சியம், காப்பர் போன்றவை உள்ளது. இருப்பினும் இதில் கலோரிகள் மிகவும் குறைவு. 100 கிராம் கடுகு இலையில் 30 கலோரி தான் உள்ளது.
  • ஒட்ஸ், பால் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து காலையில் சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி ஏற்படாது. இதனால் உடல் எடையை குறைக்கலாம்.
  • தினமும் மாலையில் ரெட் ஒயின் 120 மில்லி வரை குடிக்கலாம். இதில் அதிக அளவிலான ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
  • உடல் எடையை குறைக்க தினமும் 5 பேரீட்சைப்பழம் சாப்பிட்டால் போதும். இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி பசியை குறைக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம்.

Share this story