உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை சரி செய்ய என்ன செய்யலாம்?

உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை சரி செய்ய என்ன செய்யலாம்?

சமையல் செய்யும் போது சூடான பாத்திரத்தில் கையை வைத்தாலோ அல்லது நெருப்பினால் நமது உடல் பாதிக்கப்பட்டாலோ தீக்காயம் ஏற்படுகிறது. தீயினால் ஏற்படும் காயம் லேசானதாக இருந்தால் சருமத்தின் மேற்பரப்பில் மட்டுமே பாதிப்படைந்திருக்கும். மோசமான நிலையாக இருந்தால் சருமத்தில் உள்ள திசுக்கள் பாதிப்படையும். இந்த தீக்காயங்கள் நமக்கு ஒரு அருவருப்பான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தீக்காயங்களை சரி செய்யும் வழிமுறையை இப்போது பார்க்கலாம்.

தீக்காயங்களை சரிசெய்யும் வழிமுறை:-

  • தேனை தீக்காயம் ஏற்பட்ட சருமத்தில் தடவினால் அதை குணமாக்கலாம். இதற்கு காரணம் இதில் உள்ள ஆண்டி – ஆக்ஸிடெண்டுகள் தான்.
  • ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து பின்னர் அதை தீக்காயம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பயன்படுத்தினால் உடண்டி நிவாரணம் கிடைப்பதோடு வீக்கம் ஏற்படுவது குறையும்.
  • தீக்காயம் ஏற்பட்ட பகுதிகளில் கற்றாழையை பயன்படுத்தினால் காயம் குணமாவதோடு, சருமம் புத்துணர்வு பெறுகிறது. சருமத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு.
  • குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் கட்டி அல்லது வாழைப்பழத் தோலினை தீக்காயம் ஏற்பட்ட பகுதியில் நேரடியாக பயன்படுத்தினால தீக்காயத்தால் ஏற்படும் வலி குறையும்.

Share this story