இதயத்தை ஆரோக்கியமாக வைக்க என்னவெல்லாம் செய்யலாம்!!!

இதயத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். சிறு பாதிப்பு வந்தாலும் அது நம்மை பெரும் அளவில் பாதிக்கும் தன்மையாய் மாறிவிடுகிறது.
இன்று அதிக அளவில் மனிதர்கள் மாரடைப்பால் பாதிக்க பட்டுள்ளார்கள். அதற்கு அவர்களின் உணவு பழக்கம் மற்றும் சீரான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதே.
ஆலோசனைகள்:
மது அருந்தினால் மாரடைப்புக்கு உள்ளாவோம் என்று தெரியாமலே சில பேர் அதை குடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதிகம் மது அருந்துவதால் விரைவில் மாரடைப்பு நோய்க்கு உள்ளாவார்கள்.
உடற்பயிற்சி என்பதே இப்பொழுது எவரிடமும் இல்லாத விஷயமாக மாறிவிட்டது. போதுமான உணவு எடுத்து கொள்வது போலவே உடலுக்கு தேவையான உடல் அசைவுகளும் தேவை என்பது தெரியவில்லை. உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் தசைகள் வலு பெறுவதோடு இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
அதிக அளவு கொழுப்புகள் இருக்கும் உண்வுகளையே அதிகமாக உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள், இதனால் உங்கள் உடலின் எடை அதிகரித்து அது பல விளைவுகளை ஏற்படுத்தி விடும். முக்கியமாக எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்த்து குறைந்த அளவில் எடுத்து கொள்வது நல்லது.