தீராத சளி மற்றும் இருமலை சரி செய்ய என்ன செய்யலாம்?

தீராத சளி மற்றும் இருமலை சரி செய்ய என்ன செய்யலாம்?

பருவ நிலை மாற்றம் ஏற்படும் போது நம்மில் பலரும் அவதிபடக் கூடிய ஒரு பிரச்சனை என்று சொல்லலாம். சளி மற்றும் இருமலை சரி செய்ய சில வீட்டில் இருக்கும் பொருள்களே போதுமானது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

தீராத சளி மற்றும் இருமலை சரி செய்யும் வழிமுறை:-

  • ஆரஞ்ச் ஜூஸ், தேன் சிறிது உப்பு சேர்ந்த கலவையை குடித்தால் இருமலை நீக்கலாம்.
  • கொய்யப்பழம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று அதனை மிளகு பொடி சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நுரையிரலில் உள்ள சளியை நீக்கலாம்.
  • இரவு தூங்குவதற்கு முன்னால் பாலில் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் சளி மற்றும் இருமல் தொல்லையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
  • வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் இருமல், சளி விலகும்.
  • வெற்றிலை சாறும், தேனும் கலந்து சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • இரவில் தூங்கும் முன்னர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் இருமல் வராமல் தடுக்கலாம்.
  • கற்பூர வள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி அந்த நீரை குடிப்பதன் மூலம் சளியிலிருந்து உடனடியாக விடுபடலாம்.

Share this story