பாகற்காய் கசப்பு தன்மையில் இருக்கும் பல நன்மைகள் ?

பாகற்காயில் இருக்கும் விட்டமின்கள் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு மிக உகந்தது. அவர்கள் இதை தினமும் உணவில் சேர்த்து கொள்ள உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறைந்து நலமுடன் வாழலாம்.
நீரழிவு பிரச்சனையால் அவதி படுகிறீர்களா இனி உங்கள் உணவில் கட்டாயம் பாகற்காய் இருக்க வேண்டும். இதை தொடர்ந்து உணவில் எடுத்து கொள்ள உங்கள் பிரச்சனை விரைவில் தீரும்.
தொடர் இருமல், சளி தொல்லை போன்றவைகளுக்கும் பாகற்காய் நல்லது. வயிற்றில் ஏற்படும் அலற்சி, தொற்று, புழுக்களில் இருந்து, இதில் இருக்கும் புரோட்டின்கள் நம்மை பாதுகாத்து கொள்ள கூடியது.
கோடைகாலங்களில் உடலில் ஏற்படும் சூட்டை தனித்து உடலுக்கு உஷ்னத்தை கொடுக்கும் திறன் கொண்டதே பாகற்காய்.
இரைப்பையில் ஏற்படும் கோளாறுகளுக்கும் மற்றும் மூல பிரச்சனைகளுக்கும் நல்ல அறுசுவை மருந்து தான் பாகற்காய்.
இதன் கசப்பு சுவையில் இருக்கும் புரோட்டின்கள், விட்டமின்கள், தாது உப்புகள், இரும்பு சத்துக்கள், நீர் சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்க கூடியது .