Tamil Wealth

மர வள்ளிக் கிழங்கில் இத்தனை நன்மைகளா?

மர வள்ளிக் கிழங்கில் இத்தனை நன்மைகளா?

மரவள்ளிக் கிழங்கு மலைப் பகுதிகளில் அதிகமாக விளைகிறது. இவை சிறிய செடிகளிலிருந்தே உருவாகிறது. இதன் வேர்ப் பகுதிகளில் கிழங்குகள் உருவாகிறது. இதில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

மரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்:-

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பலவகையான பொருள்களை தயாரிக்க இது மூலப் பொருளாக திகழ்கிறது. கேரள மாநிலத்தில் பெரும்பாலானோரின் காலை உணவாக மரவள்ளி உள்ளது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மாவில் தோசை, அடை, உப்புமா போன்றவையும் தயாரிக்கலாம்.

மர வள்ளிக் கிழங்கில் அதிகப்படியான மாவுச் சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடலுக்கு ஆற்றலை தருகிறது. இதை சாப்பிட்டால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். இதன் மூலம் கைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலியை குறைக்கலாம்.

மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரியை நீர் சேர்த்து காய்ச்சி குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும். ஜவ்வரிசியை மோரில் கலந்து குடித்து வந்தால் உடலில் ஏற்படும் அதிகப்படியான உஷ்ணம் குறையும்.

இந்த கிழங்கை துண்டு துண்டாக வெட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் ருசியான சிப்ஸ் தயார். வீட்டில் பாயாசம் செய்யும் போது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கிழங்கின் மாவை குளுக்கோஸ் தயாரிக்க மருத்துவ துறைகளில் பயன்படுகிறது.

காகிதங்கள், அட்டைகள் தயாரிக்கவும், பசை தயாரிக்கவும் இதை பயன்படுத்தலாம். சலவை செய்ய பயன்படும் கஞ்சி தயாரிக்க இது பயன்படுகிறது.

Share this story