Tamil Wealth

கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் நம் குழந்தையின் தூக்கத்தை!

கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் நம் குழந்தையின் தூக்கத்தை!

குழந்தைகளின் உறக்கமே அவர்களின் ஆரோக்கியம் :

குழந்தைகள் என்றாலே அவர்களுக்கு தூங்குவதன் வேலையே. அவர்களின் தூக்கத்தில் நமக்கு மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் தூங்குகிறது என்று நினைப்போம் அனால் அவர்களுக்கு உடனே தூக்கம் வராது. சிறிது நேரம் எடுக்கும் உறங்குவதற்கு. அவர்களை படுக்க போட்டுவிட்டு செல்ல கூடாது அவர்கள் தூங்குகிறார்களா என்று கவனிக்க வேண்டும். அவர்கள் நன்கு ஆழ்ந்து உறங்கிய பின்னரே செல்ல வேண்டும்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானதே அவர்களின் தூக்கம் தான். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உறங்க செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆழ்ந்த உறக்கம் என்பது பிறந்த உடனே வாராது. சில மாதங்கள் எடுக்கும். அதன் பிறகே அவர்கள் நல்ல ஆழ்ந்த உறக்கத்தை பெறுவார்கள். குழந்தைகள் திடீர் என்று இரவு வேளையில் முழித்து விடும். இதனால் பெற்றோர்கள் பயப்படுவார்கள், குழந்தை தூக்கவில்லையே என்று பயப்பட தேவை இல்லை, அவர்களுக்கு போதுமான தூக்கமே சிறிது நேரங்கள் தான், பின் தூக்கம் வர சில நேரங்கள் ஆகும். அவர்களுக்கு தூக்கம் என்பது மிக்க முக்கியம்.
குழந்தைகளுக்கு தேவையான தூக்கமே நல்லது, அதற்குமேல் நாம் அவர்களை தூங்க வைக்க முயற்சி செய்ய கூடாது, அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் பின் அழ ஆரம்பித்து விடும். அவர்கள் பகலில் போதுமான அளவு தூங்கி விடுவார்கள், அதனால் இரவில் தூக்கம் வருவது இல்லை.

நல்ல தூக்கமே அவர்களின் உடல் வளர்ச்சிக்கும் மற்றும் செயல் திறனுக்கும் உதவி புரிகிறது.

Share this story