நாம் அதிகம் சுத்த படுத்த வேண்டிய பொருட்களை தெரிந்து கொண்டு கவனத்துடன் கையாள வேண்டும்!

நோய் தொற்றுகள் எப்படி நம்மை பாதிக்கும் என்பது தெரியாது. ஆகையால் எதனை கையாளும் பொழுதும் மிக கவனத்துடன் கையாள வேண்டும் மற்றும் சுத்தம் செய்வதையும் நன்றாக செய்ய வேண்டும். பொருட்களை ஒழுங்கான முறையில் சுத்தம் செய்யவில்லை என்றால் அதில் இருக்கும் நுண்கிருமிகள் நமக்கு உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
கழிப்பறையை சுத்தம் செய்வது :
முக்கியமாக கழிப்பறையின் தரைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பாதத்தின் மூலம் கிருமிகள் உடலில் பரவி பல்வேறு தொற்றுக்களை ஏற்படுத்தும். கழிவறைக்கு செல்லும் பொழுது காலணியை அணிந்து செல்வதை பழக்கி கொள்ளுங்கள்.
கைபேசியின் சுத்தம் :
நாம் அதிகம் பயன்படுத்தும் கைபேசியில் நம் கைகளில் இருக்கும் கிருமிகள் மற்றும் பேசுவதால் வாயில் இருந்து வெளிப்படும் கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும். அவைகள் சரும கோளாறுகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
தூரிகை :
பல் தேய்க்க பயன்படுத்தும் தூரிகையை நன்கு சுத்தம் செய்த பிறகு பயன்படுத்துங்கள் மற்றும் பயன்படுத்திய பின்னரும் நன்கு சுத்தம் செய்த பின்னரே வையுங்கள். ஈரத்துடன் வைக்க கொசுக்கள் சென்று அசுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் கிருமிகள் தங்கி விடும், நாம் அதனை உபயோகிக்க வாயின் மூலம் கிருமிகள் சென்று உடல் உபாதைகளை ஏற்படுத்தி பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.
பாயினை சுத்தம் செய்வது :
படுத்து உறங்க பயன்படும் பாய் மற்றும் தலையணை, இதர பொருட்களை சுத்தமாக துவைத்து பயன்படுத்துங்கள். இதில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருப்பதால் விரைவில் நோய்கள் தொற்றி கொள்ளும். ஓவ்வொருமுறையும் தூங்க செல்லும் பொழுது துணிகளை நன்கு உதறிய பின்னரே பயன்படுத்துங்கள் மற்றும் தலையணையில் அழுக்குகள் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள், இதில் இருக்கும் கிருமிகள் தலை முடி பிரச்சனைகள் மற்றும் சரும கோளாறுகளையும் ஏற்படுத்தும். தலையணையில் இருக்கும் தூசுகள் காதில் சென்று அரிப்புகள், காது வலியை உண்டாக்கும்.