சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தி முடி உதிர்தலை தடுக்க வழிகள்

சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தி முடி உதிர்தலை தடுக்க வழிகள்

தலைமுடி  உதிர்வு மற்றும் தலைமுடி நரைத்தல் இரண்டுமே ஒரு மனிதனுக்கு அழகை குறைக்ககூடிய ஒரு விஷயமாகும். தலையில் எண்ணெய் பசை இல்லாமல் இருந்தால் தலைமுடி வறட்சி காரணமாக உடைந்து போதல் மற்றும் முடி உதிர்தல் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தினால் எந்தவித நிரந்தர தீர்வும் கிடைக்காது. இயற்கையான வழிகளை பயன்படுத்தினால் நிரந்தர மற்றும் பக்கவிளைவு இல்லாத தீர்வினை பெறலாம். அதில் ஒரு வகையினை இப்போது பார்க்கலாம்.

செய்முறை:-

சூரியகாந்தி எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலக்கி லேசாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். தலையை சிறிது ஈரப்பதமாக்கி கொண்டு (தலையை ஈரப்பதமாக்குவதால் எண்ணெய் முடியில் எளிதாக பரவ முடியும்.)  பின்னர் தலையில் நாம் தயாரித்த அந்த எண்ணெய் கலவையை தடவ வேண்டும்.

தலைமுடியை நன்றாக மசாஜ் செய்து சிக்கு இல்லாமல் தலையை சீவ வேண்டும். ஒரு காட்டன் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து தலையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி அலசுவதன் மூலம் முடி உதிர்தலை குறைக்கலாம்.

Share this story