சூரியனின் தாக்கத்தினால் சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளை போக்க வேண்டுமா?

அடிக்கும் வெயிலுக்கு வெளியே சென்று வந்தால் முகம் தனது பொலிவை இழக்கும். இதனை சரி செய்ய சில வழிமுறைகளை தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ளலாம்.
சூரியனிடம் இருந்து வெளிப்படும் கதிர்களால் சருமத்தில் கருமை நிறம் உண்டாகி இறந்த செல்களை உருவாக்கும்.
சூரியனின் குறைபாடுகளை போக்க உதவும் பொருட்கள் :
பழங்களில் உதவும் ஆரஞ்சு மற்றும் எலும்பிச்சை ;
எலும்பிச்சையை இரண்டாக வெட்டி அதன் சாற்றினை தனியே பிரித்து எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரை கலந்து கொண்டு முகத்தில் தினம் பயன்படுத்த வெப்பத்தினால் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகத்தை அழகு படுத்தும். இதனுடன் ஆரஞ்சு பழத்தின் சாற்றினையும் கலந்து உபயோகிக்க கருமை நிறம் நீங்கும் மற்றும் சருமத்தில் உண்டாகும் கிருமிகளை அழித்து பாதுகாக்கும்.
அரிசி மாவு கொண்டு முகத்தை பாதுகாக்கலாம் :
வீட்டில் பயன்படும் அரிசி மாவை ஆரஞ்சு பழத்தின் சாற்றுடன் கலந்து முகத்தில் பயன்படுத்தி 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து வெறும் நீரினால் கழுவ வேண்டும். இதனை தினம் செய்து வர வெப்பத்தினால் ஏற்படும் சரும பிரச்சனைகள் வராது.