வெள்ளை பூண்டு கொண்டு உடலில் இருக்கும் நச்சு தன்மையை போக்க வேண்டுமா ?

உடலில் இருக்கும் நச்சு தன்மையை போக்க உதவும் வெள்ளை பூண்டு. இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் உடல் உபாதைகளை குண படுத்த உதவும். நச்சு தன்மையை போக்க பூண்டை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நீர்
வெள்ளை பூண்டு
முதலி வெள்ளை பூண்டின் தோலை உரித்து எடுத்து கொள்ளுங்கள். அதனை சுத்தம் செய்யுங்கள், இதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து உரித்து வைத்து கொண்டு, ஒரு பாத்திரத்தில் பாதியளவு நீரினை எடுத்து கொண்டு நன்கு கொதிக்க விடுங்கள். வெங்காயம் மற்றும் பூண்டை அரைத்தோ அல்லது துண்டு துண்டுகளாக நறுக்கியோ வைத்து கொள்ளுங்கள். நீர் நன்கு கொதித்த பிறகு அதனுடன் வெங்காய பூண்டின் பேஸ்ட் சேர்த்து கொள்ளுங்கள், நீரின் அதிக சூட்டில் பேஸ்ட்டில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நீரில் கலந்து விடும். சூடான நிலையில் இருந்து கொஞ்சம் குளிர்ச்சி நிலைக்கு திரும்பி பிறகு அருந்தலாம்.
குடிக்கும் முறை :
- உங்களுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளியின் ஆரம்ப நிலையிலே இதனை அருந்தலாம்..
- சளி தொல்லையால் ஏற்படும் நெஞ்சு வலி, தொண்டை எரிச்சல் போன்றவற்றிக்கு இதனை தின இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வர நல்ல பலனை கொடுக்கும் ஆற்றல் கொண்டது.
- உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கவும் இதனை தினம் அருந்தலாம், இதனால் எவ்வித விளைவுகளும் வராது.
- மலச்சிக்கல் கோளாறு உள்ளவர்களும் இதனை அருந்த நல்ல பலனை தரும் மற்றும் தொண்டையில் இருக்கும் புண்களையும் மற்றும் வயிற்றில் இருக்கும் கிருமிகளையும் அழிக்க உதவுகிறது.