Tamil Wealth

விரைவில் உங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ் படிங்க!

விரைவில் உங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ் படிங்க!

உங்கள் முகத்தை பளிச்சென்று வைத்து கொள்ள உதவும் சில பொருட்களையும் அதனை பயன்படுத்தும் முறைகளையும் தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள், நீங்களே மாற்றத்தை காண முடியும்.

சருமத்தில் உருவாகும் திட்டுகள் :

உங்கள் சருமத்தில் உருவாகும் சிவந்த திட்டுகளை போக்க பயன் உள்ளது கற்றாழை. கற்றாழையின் இலைகளில் இருந்து கிடைக்கும் ஜெல்லை தினம் சருமத்திற்கு பயன்படுத்தி வர சருமத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி முகம் பிரகாசமான தோற்றத்தை கொடுக்கும்.
சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளுக்கு காரணமே கொலாஜன் குறைபாடு தான். கற்றாழை ஜெல் குளிர்ச்சியை கொண்டிருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து சருமத்தை பாதுகாக்கிறது.

பருக்கள் :

முகத்தில் உருவாகும் பருக்களால் முக வசீகரமே பாதிக்கப்படும். பருக்களால் ஏற்படும் தழும்புகள் திட்டுகளாகவே சருமத்தில் இருக்கும். இதனையெல்லாம் போக்க உதவும் டீ ட்ரீ எண்ணெய், இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் சருமத்தில் ஏற்படும் பருக்களை விரைவில் நீக்கி, மிருதுவான சருமத்தை கொடுத்து, பளிச்சென்று வைத்து கொள்ளும்.

பாதாம் எண்ணெய் :

பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் சருமத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இதில் கண்களிற்கு கீழ் மற்றும் உதடுகளின் மேல் உருவாகும் கருமை நிறம், கழுத்தில் உருவாகும் கருமை நிறம், திட்டுகள், சுருக்கங்கள், வயதான தோற்றத்தினால் உண்டாகும் கோடுகள் போன்றவைகளை நீக்கி அழகை பல மடங்கு மெருகூட்டும்.

உதட்டின் அழகு :

சிவந்த உதடுகளை பெற மற்றும் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள தேங்காய் எண்ணையை காய்ச்சி அதனுடன் சிவந்த நிறம் உடைய பழங்களை சேர்த்து மசித்து பேஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். அதனை உதடுகளில் தேய்த்து ஐஸ் கட்டிகளை கொண்டு அதெற்குமேல் தடவ வேண்டும். இது உங்கள் உதடுகளை விரைவில் சிவப்பழகாக மாற்றும்.

கண்களின் அழகு :

நமது அழகையும் தோற்றத்தையும் கொடுப்பதே கண்கள் தான். அதனை அழகு படுத்தவும் மற்றும் பாதுகாக்கவும் செவ்வந்தி பூ டீ பேக் உதவுகிறது. இதனை நீரில் போட்டு கொதிக்க விட்டு பின்னரே இறக்கி ஆறியதும் குளிர்சாதன பெட்டியில் சில நிமிடங்கள் வைத்து பின்னர் கண்களுக்கு மசாஜ் செய்ய கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து, கருவளையம் நீங்கி அழகான கண்களை கொடுக்கும்.

Share this story