சுப நிகழ்ச்சிகளில் தங்களை அதிகம் அழகு படுத்தி கொள்ள வேண்டுமா ?

பொதுவாகவே நம் அழகில் அதிக ஆர்வம் காட்டுவோம். அதேபோல் ஒரு சுப நிகழ்ச்சி என்றாலோ, திருவிழா காலங்களிலோ நம்மை அழகு படுத்த நாம் பல பொருட்களை பயன்படுத்துகிறோம், சில விஷயங்களை செய்கிறோம். எந்த பொருட்களை பயன்படுத்தலாம், எப்படி அழகு படுத்தலாம் என்று பார்க்கலாமா வாங்க!
சுப நிகழ்ச்சிக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கிறோம், சருமத்தை அழகு படுத்த பயன்படுத்த உதவும் பொருட்களையும் நன்கு ஆலோசித்த பின்னரே உபயோகிக்க நல்லது.
கண்களுக்கு பயன்படும் பொருட்கள் :
நம் கண்களை அழகாக காட்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உயோகிக்கும் காஜல், அண்டர் ஐ கன்சீலர், ஐப்ரோ பென்சில், ஐ லாஷ் கர்லேர், மஸ்காரா போன்றவைகள் வேதி பொருட்களை கொண்டே தயாரிக்க பட்டது. இவைகளை கண்களுக்கு பயன்படுத்துவற்கு முன் கண்களுக்கு என்று இருக்கும் மருத்துவரிடமோ அல்லது நன்கு தெரிந்தவரிடமோ விசாரித்து அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை ஆலோசித்து பயன்படுத்துங்கள். இவைகள் நம் கண்களை மிக அழகான தோற்றத்துடன் காட்சி கொடுக்கும். அதேபோல் அதனால் நமக்கு ஏற்படும் விளைவுகளையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதிகம் உபயோகிப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
அழகிற்கு பயன்படுத்தும் பொருட்கள் :
முகத்தினை அழகு படுத்த உதவும் பொருட்கள் மாய்ஸ்சரைசர், டோனர், ஸ்க்ரபர், நைட் க்ரீம் போன்றவை சருமத்தை பராமரித்து அழகு படுகிறது. அழகிற்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சரியான முறைப்படி, அளவான முறையில் பயன்டுத்தினால் தான் அழகையும் பெறுவோம், சருமத்திற்கு எவ்வித கோளாறுகளையும் ஏற்படுத்தாது.
உதடுகளை அழகு படுத்த வேண்டுமா?
உதடுகளை கூடுதல் அழகு படுத்த வேண்டும் என்று நாம் உபயோகிக்கும் லிப் லைனர், லிப் பாம், லிப் ஸ்க்ரப், லிப் க்ளோஸ் போன்றவை உதடுகளை அழகு படுத்தும், ஆனால் அதனால் நமக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பாதுகாக்க தீவிரமாக ஆராய்ந்த பின்னரே உபயோகிக்க நல்லது.