ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டுமா?

சாப்பிட வேண்டிய உணவுகள் :
அதிமான வயிற்று போக்கால் அவதி படுகிறீர்களா, நம் சமையலில் பயன்படும் கச கசாவை வேக வைத்து சாப்பிட பலன் கிடைக்கும், அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள் அதனுடன் சர்க்கரை அல்லது தேனை கலந்து கொள்ளலாம்.
உணவு அதிக அளவில் சாப்பிட அது தொண்டையில் சிக்கி கொண்டு ஏற்படும் விக்கலை சரி செய்ய தேனுடன் புளிப்பு சுவை உடைய நெல்லிக்காய் போன்ற காய்களை பயன்படுத்த விக்கல் நிற்கும்.
மிளகு :
சளி தொல்லைகள், இருமல் போன்றவை குணம் ஆக மிளகை வாயிலிட்டு நன்கு சுவைக்க அதில் இருக்கும் கார தன்மை தொண்டை கரகரப்பை போக்கும் அல்லது மிளகு தூளாக்கி கொள்ளலாம். இதனை சாப்பிட முடியவில்லை என்றால் அதனுடன் தேனை கலந்து குடிக்கலாம் பல நோய் தொற்றுகளிடம் இருந்து பாதுகாக்கும்.
துளசி :
துளசி இலைகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் தீராத தலை வலியால் அவதி படுவோர்க்கு நல்ல மருந்தாக கருத படும், இலைகளை நன்கு அரைத்து நெற்றியில் பயன்படுத்தலாம் .