புருவங்களில் இருக்கும் முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா?

சிலருக்கு புருவங்களில் இருக்கும் முடி வளர்ச்சி குறைவாக இருக்கும், இதன் வளர்ச்சியை அதிகரித்து அழகான புருவங்களை பெற விரும்புவோர்க்கு உதவும் சில குறிப்புகளை தெரிந்து கொள்ளலாமா!
சிலருக்கு புருவங்களில் இருக்கும் முடிகள் அதிகம் உதிரும் நிலை இருக்கும். இதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் ஏதேனும் கோளாறு தான்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டு உள்ளது. இதனை தலைக்கு பயன்படுத்துவது போலவே, கண்களை சுற்றியும், புருவத்திற்கு பயன்படுத்த நல்ல முடி வளர்ச்சியை பெறலாம் மற்றும் இதில் இருக்கும் சத்துக்கள்
வைட்டமின் ஈ
லாரிக் அமிலம்
இரும்பு சத்து
புரத சத்து
மேற்கூறியவை இருப்பதால் இரவு தூங்கும் பொழுது புருவங்களுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து தூங்குங்கள், காலை எழுந்தவுடன் புருவங்களை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர நல்ல பலனை கொடுக்கும் மற்றும் ரத்த ஓட்டத்தை சிறப்பாக கொடுக்கும், முடி உதிர்வுக்கு முக்கிய காரணமே புரத சத்து குறைபாடு தான்.
முட்டை :
முட்டையின் வெள்ளை கருவில் இருக்கும் புரத சத்துக்கள் முடிகளின் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது. மஞ்சள் கருவில் இருக்கும் வைட்டமின் டி முடி வளர்ச்சிக்கு உதவும்.
மஞ்சள் கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்து நன்கு அடித்து கொள்ளுங்கள். புருவங்களில் மசாஜ் செய்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து நீரினை கொண்டு கழுவ வேண்டும். இதனை தினம் செய்து வர அடர்த்தியான முடிகளை கொண்ட புருவங்களை பெறலாம்.
புருவங்கள் கொடுக்கும் நன்மைகள் தெரியுமா !
முகத்தில் இருக்கும் வியர்வை மற்றும் கண்களில் ஏற்படும் வியர்வையால் ஏற்படும் ஈரப்பதத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
வெங்காயம் :
வெங்காயத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள், சல்பர் போன்றவை முடிகளின் வளர்ச்சியிலும் பயன்படுகிறது. வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனை நன்கு அரைத்து சாற்றினை மட்டும் புருவங்களில் தினம் தேய்த்து வர வேர் நுனிகளில் வளர்ச்சியை கொடுக்கும்.
வைட்டமின் ஈ :
வைட்டமின் ஈ இருக்கும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்த முடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் பயன் உள்ளது. ஒலிக் அமிலம் முடிகளில் இருக்கும் ஈரப்பதத்தை நீக்கி வேர் நுனிகளில் முடி வளர்ச்சியை தூண்டும்.
ஆலிவ் எண்ணெயுடன் தேனை கலந்து தேய்க்க நல்ல வளர்ச்சியை பெறலாம் மற்றும் இதனை புருவத்தில் தேய்த்து விட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை வெறும் நீரினை கொண்டு கழுவ வேண்டும் அல்லது இரவு நேரத்தில் தூங்கும் பொழுது பயன்படுத்தி காலை எழுந்தவுடன் கழுவுங்கள்.