Tamil Wealth

தலையில் இருக்கும் பேன்களின் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா?

தலையில் இருக்கும் பேன்களின் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா?

தலையில் இருக்கும் பேன்கள் கொடுக்கும் தொந்தரவை நீக்கி தலையை சுத்தம் செய்து முடி வளர்ச்சிக்கும் உதவி புரியும் சில வழிமுறைகளை காணலாம். பொது இடங்களில் பேன் கடித்தால் கைகளை உடனே தலையில் கொண்டு சென்று அரிப்புக்களை சரி செய்ய கூடும் இது நம் நடைமுறையை வித்தியாசமாக காட்டும்.

வழிமுறைகள் :

1.வேப்பிலை

வேப்ப இலைகளை நன்கு அரைத்து அதன் சாற்றினை தனியே பிரித்து எடுத்து சாற்றினை தலை முழுவதும் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளிக்க பேன்கள் அனைத்தும் ஒழிந்து, தலையில் ஏற்படும் பொடுகு போன்ற தொந்தரவுகள் அகலும். இந்த செய்முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதுமானது.

2.பாதம் பருப்பு

பாதம் பருப்பை சாப்பிட கிடைக்கும் ஆரோக்கியம் போலவே அதனை அரைத்து அதனுடன் சிறிது எலும்பிச்சை சாற்றினை கலந்து தலைக்கு பயன்படுத்த பேன்கள் இன்றி , பொடுகு இன்றி, முடி வளர்ச்சி போன்றவை கிடைக்கும்.

3.வெந்தயம்

வெந்தயத்தை நன்கு அரைத்து அதனை தலைக்கு முழுவதும் தேய்த்து பின் குளிக்க நல்ல பலனை கொடுக்கும்.

Share this story