Tamil Wealth

கண்களில் ஏற்படும் கருவளையத்தை போக்க வேண்டுமா? அதற்கான தீர்வு !

கண்களில் ஏற்படும் கருவளையத்தை போக்க வேண்டுமா? அதற்கான தீர்வு !

கண்கள் தான் நம்மை அழகு படுத்தும். அதில் உண்டாகும் கருவளையம், கோடுகள், கருமை நிறம் போன்றவற்றால் கண்களின் அழகே கெட்டு விடுகிறது. அதற்கான சில வழிமுறைகளை தெரிந்து பயன்படுத்தலாம்.
வயது ஆக ஆக சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கும். சிலர் இந்த காரணத்திற்காகவே வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. கீழ் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை செய்து பயன் பெறுங்கள்.

வைட்டமின் ஈ :

கண்களில் ஏற்படும் குறைபாடுகள் அனைத்திற்கும் காரணம் வைட்டமின் இ குறைவாக இருப்பதால் தான். இதற்கு கண்களுக்கு கொடுக்கும் இயற்கை பொருட்களை கொண்டு மருத்துவ முறை செய்து பார்க்கலாம்.

செய்முறை 1:

தேவையான பொருட்கள் :

ஆலிவ் எண்ணெய் – 1/2 கப்
எலும்பிச்சை -1
தேன்- சிறிதளவு

முதலில் ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் எலும்பிச்சை பழத்தினை இரண்டு துண்டாக வெட்டி சாற்றினை மட்டும் பிழிந்து எண்ணெயுடன் கலந்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையுடன் தேனை சேர்த்து கொள்ள வேண்டும். இதனை தினம் முகத்தில் மற்றும் கண்களில் கீழ் ஏற்படும் கருவளையம் மற்றும் சுருக்கங்கள், கோடுகள், கருமை நிறத்தை மாற்ற பயன்படுத்துங்கள். இளமை வயதில் ஏற்படும் சுருக்கங்களையும் போக்கி அழகான கண்களின் தோற்றத்தை கொடுக்கும்.

செய்முறை 2:

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய்- 1/2 கப்
மஞ்சள் – 1/2 கப்
எலும்பிச்சை – ஒன்று

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளை முதலில் சிறிதளவு நீரினை விட்டு நல்ல கெட்டி பதம் வந்த பிறகு அதனுடன் எலும்பிச்சையின் சாற்றினை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த பேஸ் மேக்கை முகத்திற்கு பயன்படுத்தலாம் அல்லது இதனுடன் தேங்காய் எண்ணெயையும் கலந்து பயன்படுத்த கண்களுக்கு எவ்வித குறைபாடுகள் வராமல் தற்காத்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. தேங்காய் எண்ணெய் கண்களில் ஏற்படும் மங்கிய நிலை, கண்களில் வீக்கம், காயங்களையும் குண படுத்தும் நல்லதொரு அருமருந்தாக கருத படுகிறது.

Share this story