நீளமான கூந்தலை பெற வேண்டுமா?

பெண்களிடம் அதிகம் காண படும் குறைகளில் ஒன்றே முடி உதிர்வு, வளர்ச்சி இன்றி இருப்பதே. அதனை தடுக்க சில வழிமுறைகள்.
முடி வளர்ச்சி :
கொய்யாவின் இலைகளில் இருக்கும் வைட்டமின் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது.
தலையில் நன்கு தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
கொய்யா கனியை விரும்பி சாப்பிடுகிறோம் அதன் இலைகளில் இருக்கும் மருத்துவம் நமக்கு தெரிவதே இல்லை. முடி வளர்ச்சி, முடி உதிர்வை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது இந்த கொய்யா இலைகள். இதனை அரைத்து தலைக்கு பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.
இலைகளின் சாற்றினை வாரத்திற்கு இருமுறை பயன்படுத்த நீளமான கூந்தலையை பெறலாம் மற்றும் வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் முடி பிரச்சனைகள் மற்றும் அதிகமான வெப்பத்தினால் தலை வலி ஏற்படாமல் அதனால் ஏற்படும் ரத்த ஓட்ட பாதிப்புகளையும் வராமல் தடுக்கும் மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
பொடுகு தொல்லைகள் நீங்கும் மற்றும் மிருதுவான முடி வளர்ச்சியை கொடுத்து அழகான தோற்றத்தை கொடுக்கும்.