Tamil Wealth

பிரகாசமான சருமத்தை பெற வேண்டுமா? இதை படிங்க!

பிரகாசமான சருமத்தை பெற வேண்டுமா? இதை படிங்க!

உங்கள் சருமத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவும் சில அழகு குறிப்புகளை தெரிந்து கொண்டு பயன்படுத்தி நல்ல பலனை பெறுங்கள்.

ராஸ்பெர்ரி பழங்கள் :

உதடுகளில் இருக்கும் கருமை நிறத்தை போக்கவும், நல்ல சிவப்பழகை கொடுக்க உதவும் ராஸ்பெர்ரி பழங்களை பயன்படுத்தும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை :

சமையலில் பயன்படும் தேங்காய் எண்ணெயை சிறிது சூடு படுத்தி. இறக்கிய பின்னர் அதில் நன்கு பழுத்த ராஸ்ப்பெரி பழங்களை சேர்த்து கொண்டு மசிக்க வேண்டும். இதனை அப்படியே குளிர் சாதன பெட்டியில் சில நேரங்கள் வைத்து கொள்ளுங்கள். பின்னர் உதடுகளில் கைகளை பயன்படுத்தி உபயோகிக்க வேண்டும். சிறிது நேரத்தில் கழுவிட வேண்டும். இதனை தினம் பயன்படுத்த உதடுகளை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவும் மற்றும் நல்ல சிவப்பழகை கொடுக்கும்.

எண்ணெய் :

பழங்களின் விதைகளில் இருந்து தயாரிக்க படும் எண்ணெய்களை சருமத்திற்கு பயன்படுத்த மாற்றத்தை காணலாம்.
ராஸ்பெர்ரி பழத்தின் விதைகைளை கொண்டு தயாரிக்க படும் எண்ணெயை சருமத்திற்கு பயன்டுத்த கருமை நிறம் நீங்கும் மற்றும் இதனுடன் மாதுளை விதைகளின் எண்ணெயும் சேர்த்து கலக்கி, இரண்டு கைகளிலும் ஒன்றாக சேர்த்து தடவி கொண்டு முகத்தில் பயன்படுத்த வேண்டும். வயதானவர்களுக்கு முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்கும் மற்றும் பருக்கள் மறையும், கோடுகளை மறைய செய்யும்.

சிவப்பு நிற திட்டுகள் :

சருமத்தில் சிலருக்கு உருவாகும் சிவப்பு நிற திட்டுகளை போக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். சருமத்தில் இருக்கும் கொலாஜென் குறைவதால் சரும கோளாறுகள் ஏற்படும். கற்றாழை ஜெல்லை பயன்படுத்த மென்மையான சருமத்தை பெறலாம் மற்றும் அழகான முக அழகை பெறலாம்.

டீ ட்ரீ எண்ணெய் :

இதனை சருமத்திற்கு நேரடியாக பயன்டுத்தினால் ஒரு வித எரிச்சல் உருவாகும், அதற்கு பதிலாக நீங்கள் உபயோகிக்கும் மாய்ஸ்ச்சரைசருடன் கலந்து உபயோகிக்கலாம், இதனால் சருமத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும், முக்கியமாக பருக்கள் விரைவில் மறைந்து தழும்புகளை மறைக்கும்.

செவ்வந்தி பூ டீ பேக் :

செவ்வந்தி பூ டீ பேக் கொண்டு தயாரிக்க பட்ட டீயை கண்களை சுற்றி தேய்க்க வேண்டும். இது கண்களில் ஏற்படும் கருவளையம், கண்களில் ஏற்படும் சோர்வை போக்கும் மற்றும் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து பார்வை தெளிவை கொடுக்கும்.

மேற்கூறிய பொருட்களை பயன்படுத்தி பிரகாசமான அழகை கொடுக்கும். பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

Share this story