உங்கள் அழகை சீக்கிரம் அதிகரிக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க !

அதிகமாக வெயிலில் செல்வதாலும் மற்றும் மன அழுத்தங்களாலும், சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பதாலும் முகத்தில் கருமை நிறத்தை உருவாக்கும். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது.
அழகை கொடுக்கும் பால் :
பால் குடிப்பதனால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியம் போலவே இதனை சருமத்திற்கு பயன்படுத்த நல்ல முக அழகை கொடுக்கும்.
செய்முறை :
ஒரு குவளையில் பாலை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் வாழை பழத்தை சேர்த்து நன்கு மசித்து கொண்டு பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகத்தில் அனைத்து புறங்களிலும் படும் படி நன்கு தேய்க்க வேண்டும். மசாஜ் செய்வதை போல் தேயுங்கள். தேய்த்து முடித்த பின்னர் 20 அல்லது 25 நிமிடங்கள் கழிந்த பிறகு நீரினை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இது உங்கள் முகத்திற்கு நல்ல பலனை தரும்.
தயிருடன் தேன் :
செய்முறை :
தேனுடன் தயிரை கலந்து நன்கு அடித்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்திற்கு பயன்படுத்தலாம், இதனால் கருமை நிறம் மறையும் மற்றும் அதனுடன் எலும்பிச்சை சாறை கலந்து உபயோகிக்க சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கி பளிச்சென்ற முகத்தை கொடுக்கும். இந்த பேஸ்டை சருமத்தில் பயன்படுத்தி 20 அல்லது 25 நிமிடங்களில் முகத்தை குளிந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும்.
ரோஸ் வாட்டருடன் பால் :
பாலுடன் ரோஸ் வாட்டரை கலந்து சருமத்திற்கு பயன்படுத்த நல்ல சிவப்பழகை கொடுக்கும் மற்றும் இதனை இரவு தூங்கும் பொழுது முகத்தில் பயன்படுத்திவிட்டு தூங்க விரைவில் அழகை பெறலாம்
மாம்பழம் :
மாம்பழத்தின் சதை பற்றினை சருமத்திற்கு பயன்படுத்துவது போலவே அதன் தோலையும் பயன்படுத்த மிருதுவான சருமத்தை கொடுக்கும்.
சருமத்தில் கருமை இருக்கும் இடத்தில மாம்பழத்தின் தோலை .பாலில் தோய்த்து சருமத்தில் தடவ வேண்டும். தடவி 15 அல்லது 20 நிமிடங்கள் கழிந்த பிறகு கழுவ வேண்டும்.
கற்றாழை :
கற்றாழையில் இருக்கும் நிறமிகள் சருமத்தில் உருவாகும் பருக்கள், எண்ணெய் கசடுகள் போன்றவைகளை நீக்க பயன்படும். கற்றாழை ஜெல்லை தினம் சருமத்திற்கு பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.
தேங்காய் :
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் அதனை சருமத்திற்கு பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.