Tamil Wealth

காதுகளில் ஏற்படும் குறைபாடுகளை குண படுத்த வேண்டுமா?

காதுகளில் ஏற்படும் குறைபாடுகளை குண படுத்த வேண்டுமா?

நாம் செய்ய வேண்டிய முறைகள் :

காதுகளை அழகு படுத்தும் எண்ணத்தோடு அணிகலன்கள் அணிகிறோம். இதனால் அந்த அணிகலன்கள் தொடர்ந்து காதிலே இருப்பதால் அழுக்குகள் சேர்ந்து காதில் சில தொற்றுகளையும் மற்றும் துர்நாற்றங்களையும் ஏற்படுத்தும்.

முகத்தை துடைக்க உதவும் துணிகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். துணியை கொண்டு காதினை துடைக்கும் பொழுது துணிகளில் இருக்கும் கிருமிகள் காதினுள் சென்று பல விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் காது வலிகள், காது குத்தல் போன்றவைகள் ஏற்படும்.

இரவு தூங்கும் பொழுது பயன்படும் போர்வை, தலையணையில் இருக்கும் கிருமிகள் காதின் வழியே சென்று உடல் உபாதைகளை ஏற்படுத்தும். ஆகையால் துணிகளை சுத்தமாக வைத்து கொண்டு உபயோகியுங்கள்.

எப்பொழுதும் காதுகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் வேதி பொருட்களை கையாளுவதை தவிர்த்து இயற்கை முறையில் உருவான பொருட்களையே பயன்படுத்துங்கள். காதுகளுக்கு சிறு தூசுகள் கூட செல்லாத நிலையில் பார்த்து கொள்ளுங்கள். நம் கைகளை கொண்டு காதுகளை சுத்தம் செய்யும் பொழுது கைகளை நன்கு கழுவிய பின்னரே உபயோகியுங்கள். ஏனென்றால் நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் பொழுது அல்லது கைகளை பயன்படுத்தும் பொழுது நுண் கிருமிகள் பரவும். ஆகையால் கைகளில் இருக்கும் கிருமிகள் காதுகளில் சென்று விளைவுகளை ஏற்படுத்தாமல் கவனித்து கொள்ள வேண்டும்.

Share this story